பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர். பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். மத ஒற்றுமையை வளர்த்தவர்.